''துணிவு'', ''வாரிசு'' வெற்றி பெற கட் அவுட் வைத்த ரசிகர்கள் !
துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் முன்னணி நடிகர்கள்.
இவர்கள் இருவர் நடிப்பில் வெளியான படங்கள் ஆழ்வார்-போக்கிரி, வீரம்-ஜில்லா, ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியாகி நேருக்கு நேர் மோதியுள்ளன.
10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் பொங்கலில் ரிலீஸாகவுள்ளன.
இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், அஜித் ரசிகர்களின் சார்பில், நெல்லையி துணிவு படமும், வாரிசு படமும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் கூறி கட் அவுட் வைத்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.