தொடர்புடைய செய்திகள்
- சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை: வானிலை ஆய்வு மையம்..!
- கனமழை எதிரொலி: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..!
- சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்.. முடிந்தது கோடை..!
- தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
- வெயிலை விரட்டிய மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
மேலும் 2 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு..!
கனமழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம்.
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்
இந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்று பள்ளிகளுக்கு 6 மாவட்டங்களில் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து மேலும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
