தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்.. முடிந்தது கோடை..!
- தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
- வெயிலை விரட்டிய மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சேம்பியனாக மாற்றி வருகிறார் - முதல்வர் முக.ஸ்டாலின்
- 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்
கனமழை எதிரொலி: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..!
சென்னை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் அதன் பிறகு தற்போது தான் மழை காரணமாக பள்ளிகளுக்கு ஜூன் மாதத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
