1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk started protest in all over tamilnadu

உதயநிதி கைது!. தமிழகமெங்கும் திமுகவினர் போராட்டம்!.. அதிரடிப்படையினர் குவிப்பு...

udhyanidhi stalin
நேற்று தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில் முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து ஆபாசமாக பேசியது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று காலை 10:30 மணி அளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து தஞ்சாவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உதயநிதியின் மீது 9 பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று மதியம் 12 மணி வரை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற கூறியும் போலீசார் அதை ஏற்காமல் அவரை கைது செய்து தற்போது தஞ்சாவூர் கூட்டி சென்றுள்ளனர்..

ஒருபக்கம், உதயநிதியின் கைது திமுகவினரை கொந்தளிக்க செய்திருக்கிறது. எனவே தஞ்சாவூரில் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களிலும் திமுகவினர் சாலை மறியல் செய்து வருகிறார்கள். தஞ்சாவூரில் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்துவது, சாலை மறியலில் ஈடுபடுவது என இறங்கியிருக்கிறார்கள்.

இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை தடுப்பதற்காக அதிரடிப்படையினர் அனைத்து மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கொண்டு செல்லும் வேனை வழிகளில் திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஒருபக்கம், உதயநிதி கைது செய்யப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவாலயம் வந்து ஆலோசனை நடத்து வருகிறார். மொத்தத்தில் உதயநிதியின் கைது தமிழகத்திலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
காலை கடனை முடிச்சிட்டு வருவார்!. உதயநிதி வீட்டில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த மா.சுப்பிரமணி!..