1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:15 IST)

வெயிலை விரட்டிய மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பான்மை பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே இது வரும் திடீர் மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K