1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vck mla ss balaji says about seeman

நாம் தமிழர் கட்சி சீமான் செய்வது ஆபத்தான அரசியல்: விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி

seeman
நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்வது ஆபத்தான அரசியல் என்றும் அதுமட்டுமின்றி இழிவான அரசியல் என்றும் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு தேர்தலில் எந்த கூட்டணியிலும் தான் இல்லை என்றும் தனித்து போட்டு விடுகிறேன் என்று சீமான் கூறினாலும் அவர் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என்றும் அந்த கூட்டணிக்கு எதிராக வாக்குகளை பிரிப்பதில் முயற்சி செய்து வருகிறார் என்றும் விசிக எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். 
ஆனால் அதே நேரத்தில் சீமான் அவர்கள் தன்னுடைய சுய லாபத்திற்காகவும் சுய நன்மைக்காகவும் அரசியல் செய்து வருகிறார் என்றும் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்தார். 
 
சீமான் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அவருக்கும் லாபம் இருக்காது கூட்டணிக்கும் லாபம் இருக்காது இது நன்றாக சீமானுக்கு தெரியும் அதனால் தான் அவர் எந்த கூட்டணியிலும் சேரவில்லை என்றும் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!