1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (11:06 IST)

ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படும் சுங்க கட்டண உயர்வு: விஜயகாந்த் கண்டனம்..!

vijayakanth
ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட ஐந்து முதல் பத்து சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி, பெட்ரோல் விலை, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். தற்போது சுங்க கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் சாமானிய மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். 
 
சாலை வரி வாகனங்களுக்கான காப்பீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மக்கள் செலுத்தி வரும் நிலையில் சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?
 
எனவே உடனடியாக சுங்க கட்டணங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மென்மேலும் சுமையை திணிக்காமல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran