ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (22:47 IST)

விமான என்ஜினில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கம்!

Flight
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி சென்ற ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நேபாள நாட்டின் காத்மாண்டுவில் இருந்து பைரஹாவா என்ற பகுதியை நோக்கி இன்று ஸ்ரீஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது.  இந்த விமானத்தில் மொத்தம் 78 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த விமானத்திலன் என்ஜினில் தீப்பற்றியது. இதுகுறித்த அறிகுறிகள் தென்பட்டதும், விமானி  விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

எனவே, அவசரமாக விமானம் காத்மாண்டுவில் தரையிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, விமானம் உடனடியாக காத்மாண்டுவில் தரையிறக்கப்பட்டது.  விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என்று கண்டறிந்தனர்.


ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில்  72 பயணிகளுடன் சென்ற ஒரு விமானம் விபத்தில் சிக்கியதால் தற்போது, விமான அதிகாரிகள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.