செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (22:41 IST)

மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி

உக்ரைன் நாட்டில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதில்,6 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.

உக்ரைன் மீது ரஷிய அதிபர் உத்தரவின் பேரின் கடந்தாண்டு ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இரு நாடுககள் இடையேயான போரால்  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து உதவி செய்து வருகின்றன. இதனால், ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த  நிலையில், உக்ரைன் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நேற்றிரவில்  ரஷியா ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இதில், குடியிருப்புகள், கட்டிடங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், லிவிவ் மாகாணத்தில் இரு வீடு  இடிந்து விழுந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 6  பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது,. மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருநாடுகள் இடையே போர் உக்கிரம் அடைந்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.