1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vanniyarasu mla says tvk given us power

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

vanniiyarasu
கடந்த பல வருடங்களாகவே திராவிட கட்சிகளை நம்பியே தலித் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சி கடந்த பல தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.

அதேநேரம் தலித் மக்களின் வாக்குகளுக்காக விடுதலைச் சிறுத்தை கட்சியை தனது கூட்டணியில் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் வைத்து கொண்டதை தவிர தலித் மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்கிற புகார் இருக்கிறது. முக்கியமாக தலித் எம்.எல்.ஏக்களுக்கு அந்த இரு திராவிட கட்சிகளுமே அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அதாவது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தலித்துக்களுக்கு பங்கு கொடுக்கவில்லை.

ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தங்களது ஆதரவு கொடுத்த விடுதலை சிறுத்தை கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறது. விசிக கட்சியின் எம்.எல்.ஏ வன்னியரசு அமைச்சராக மாறியிருக்கிறார்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய வன்னியரசு ‘தலித் சமுதாயத்தினரை பொது தொகுதியில் நிற்க வைத்தோம் என திமுக, அதிமுக பெருமையாக பேசுகிறார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? தலிச் சமுதாயத்தினரை பரிதாப அடிப்படையில் ன் திராவிட கட்சிகள் பார்க்கின்றன.. கடந்த திமுக ஆட்சீய்ல் 4 விசிக எம்.எல்.ஏக்கள் இருந்தோம்.. இப்போது 2 விசிக எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் தவெகவின் கோட்பாடு’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...