1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (06:42 IST)

காத்திருப்போர் பட்டியலில் வாணியம்பாடி ஆணையர்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

காத்திருப்போர் பட்டியலில் வாணியம்பாடி ஆணையர்
வாணியம்பாடி நகராட்சி ஆணையர் நேற்று தள்ளுவண்டி பழக்கடைகளை சேதப்படுத்திய, பழ வியாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து வேறு வழியின்றி வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பழக்கடைக்காரர்களிடம் வருத்தம் தெரிவித்ததோடு தான் சேதப்படுத்திய பழங்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையையும் கொடுத்தார்.
 
இருப்பினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி உட்பட பல அரசியல்வாதிகள் வலியுறுத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கண்டனங்கள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன 
 
இந்த நிலையில் பழக்கடைகளை சேதப்படுத்தி வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாணியம்பாடி நகராட்சி புதிய ஆணையராக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி வாணியம்பாடி ஆணையர் அத்துமீறல் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து வாணியம்பாடி முன்னாள் நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீசுக்கு 14 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
பெரிய பெரிய மீடியாக்கள் எல்லாம் சாதிக்க முடியாததை சோசியல் மீடியாக்கள் சாதித்த ஒரு விஷயம்தான் வாணியம்பாடி ஆணையர் விவகாரம் என்பது குறிப்பிடத்தக்கது