செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (18:32 IST)

அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் !

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பட்டுள்ள நிலையில்,  மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

இன்று முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும்; ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தமிழகத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகுதான்  அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,   சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும் என  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும் அறிவித்துள்ளார்.