இன்னும் எத்தனை நாளுக்கு ஜனநாயகன் பத்தி பேசுவீங்க!.. கொந்தளித்த வானதி சீனிவாசன்!...
கடந்த பல நாட்களாகவே ஜனநாயகன் படம் சென்சாரில் சிக்கியது தொடர்பாக தொடர்ந்து பலரும் விவாதித்து வருகிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாகவிருந்தது. படத்தின் தணிக்கை சான்றிதழை பெறுவதற்காக டிசம்பர் 18ம் தேதி படக்குழு படத்தை அனுப்பியிருக்கிறார்கள்.
படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு யூஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சொன்னபடி சான்றிதழை கொடுக்கவில்லை. அதோடு, மீண்டும் மறுதணிக்கை என கூறியதாலும் ரிலீஸ் தேதி நெருங்கியதாலும் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு சென்சார் கொடுங்க என உத்தரவிட்டார். ஆனால், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால் படம் ரிலீஸாகவில்லை. அதன்பின் உச்ச நீதிமன்றம் சென்றும் ஒன்றும் நடக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கும் என சொல்லிவிட்டது.
ஜனநாயகன் பட சென்சாருக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள். தங்கள் கூட்டணிக்கு விஜயை கொண்டுவருவதற்காகவே இந்த மிரட்டல் என அவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஜனநாயகன் பற்றி இன்னும் எத்தனை நாட்கள் பேசுவது?.. இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி நீதிபதியும் அதுகுறித்து கருத்து தெரிவித்துவிட்டார். விஜய் அரசியல் கட்சி துவங்கியதால்தான் இது பேசப்படுகிறது.. ஜனநாயகன் மட்டுமில்லை. இன்னும் எவ்வளவோ படங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்காமல் இருப்பதே உண்மை என சொல்லியிருக்கிறார்.