அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...
பராசக்தி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பினாலும் படத்தை பார்க்க விரும்பு ரசிகர்கள் தியேட்டர் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 550 தியேட்டர்களில் பராசக்தி திரையிடப்பட்டதால் சில தியேட்டர்களில் ரசிகர்கள் இல்லாமல் காத்து வாங்குகிறது. அது தியேட்டரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் வந்த பிரச்சனை என்கிறார்கள்.
ஒருபக்கம் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பராசக்தி படக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் டெல்லி சென்றிருந்தார்கள்.
அந்த விழா முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனிடம் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும் கரூர் சம்பவம் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் சொன்ன சிவகார்த்திகேயன் விஜய் சாரின் புதிய பணத்திற்கு நான் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளை கூறியிருந்தேன்.
ஜனநாயகன் படம் விரைவில் வெளியாகும்.. அந்த படம் வந்தால் அது கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. கரூர் சம்பவம் பற்றி நான் பேச விரும்பவில்லை என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்..