திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (20:18 IST)

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: வைரமுத்து இரங்கல்

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் இன்று காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத், கோவிந்த் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்
 
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் திராவிட அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக அறிவித்தார் அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
வீரப் பதக்கங்களை
மார்புக்குச் சூடிக்கொண்ட
வெற்றித் திருமகனே
பிபின் ராவத்!
 
இன்று மரணத்தின் மார்புக்கு
விருதாகிப் போனீர்கள்
 
உங்களுக்கு
வீரவணக்கம் செலுத்துகின்றன
தேசமும் தேசியக்கொடியும்