வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (20:17 IST)

6 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியவரா பிபின் ராவத்?

இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அப்போது லெப்டினன்ட் ஜெனரல் ஆக இருந்த பிபின் ராவத் நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து இன்று அவர் அதே விமான விபத்தில் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது