வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (20:15 IST)

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: அதிமுக இரங்கல் அறிக்கை

இந்திய முப்படை தலைவர் பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் அதிமுக தனது இரங்கல் அறிக்கையை அறிக்கையை வெளியிட்டுள்ளது. விமான விபத்தில் பிபின் ராவத் உள்பட  13 பேர் மரணமடைந்தனர் என்பது செய்தி பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் அஞ்சா நெஞ்சமும் அளவில்லா வீரமும் கொண்ட தேசபக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பிபின் ராவத் என்றும் அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்பணித்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் மறைந்தபின் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது