கோவை வந்தார் முதல்வர்: இன்னும் சில நிமிடங்களில் குன்னூர் பயணம்!
இந்தியாவின் முப்படையை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் இன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அவருக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை கிளம்பினார்
அவர் தற்போது கோவை வந்து விட்டதாகவும் இதனை அடுத்து கார் மூலமாக அவர் குன்னூர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரும் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது