1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:17 IST)

எரிமலையில் உட்கார்ந்து மகுடி வாசிக்கும் மோடி! – வைகோ ஆவேசம்!

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வைகோ “பிரதமர் மோடி எரிமலை விளிம்பில் அமர்ந்து மகுடி வாசித்து கொண்டிருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.