1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:35 IST)

ஒவைசி எம்பி முன் ’பாகிஸ்தான் வாழ்க’ என முழங்கிய இளம்பெண்: பெரும் பரபரப்பு

ஒவைசி எம்பி முன் ’பாகிஸ்தான் வாழ்க’ என முழங்கிய இளம்பெண்
கடந்த சில மாதங்களாக சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய கட்சியின் எம்பியான ஓவைசி என்பவர் சிஏஏ சட்டத்துக்கு எதிராக ஆவேசமாக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஒவைசி சமீபத்தில் கலந்து கொண்டார். குடியுரிமை சட்டம் குறித்து ஒவைசி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மேடை ஏறிய அமுல்யா என்ற இளம்பெண் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ ’பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒவைசி எம்பி, அந்த பெண்ணை தடுக்க முயன்றும் அந்த பெண் அவரை கவனிக்காமல் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர் 
 
இந்த நிலையில் இளம்பெண்ணின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி எம்பி, இந்தியாவின் பல முரண்பாடான சட்டங்கள் இருந்தபோதிலும் இந்தியா தான் தனது நாடு என்றும் ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்பதுதான் தனது கோஷம் என்றும், அந்தப் பெண்ணிடம் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒவைசி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது