ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (09:28 IST)

மக்கள் நீதி மய்யம் ஆண்டு விழா: நிகழ்ச்சிகளை ரத்து செய்த கமலஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற இருக்கும் சூழலில் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ளன. நடிகர் கமல்ஹாசன் படங்களில் நடித்துக் கொண்டே கட்சிப் பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆனால் அதில் கமல் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தால் கமலஹாசன் மன வருத்தத்தில் இருப்பதால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.