1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vachathi case chennai high court judgement

வாச்சாத்தி கொடூரம்: குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

வாச்சாத்தி
வாச்சாத்தி கொடூரம் குறித்த குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு என்று சென்னை ஐகோர்ட்டில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் அந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.
 
வாச்சாத்தி மலை கிராம மக்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. 
 
நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் உறுதி செய்துள்ளது 
 
 மேலும் வாச்சாத்தி கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மகன்; உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தாய்! – கள்ளக்குறிச்சியில் சோகம்!