ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:14 IST)

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தலாமா? துரைமுருகன் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்,.
 
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும் என்றும் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும், தமிழ்நாட்டிற்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran