1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. chandrababu naidu custody case today judgement

சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க காவல்துறை மனு.. இன்று தீர்ப்பு..!

chandrababu naidu
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க காவல் துறையினர் மனு அளித்திருக்கும் நிலையில் இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த சில நாட்களாக விசாரணை செய்தது. 
 
இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30  மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுப்பது குறித்த தீர்ப்பை வழங்க உள்ளது. 
 
தற்போது சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்யப்பட்டு சிறைகாவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மகளிர் மசோதாவுடன் முடிந்தது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்..இன்று கிடையாது..!