தொடர்புடைய செய்திகள்
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடக்கம்
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்
- மே.தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரையும் வென்றது இந்திய அணி
- #ArabicKuthu பாடல் உலகளவில் புதிய சாதனை....ரசிகர்கள் கொண்டாட்டம்
- விஜய்யுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை - முன்னணி நடிகை
வாக்காளர்களுக்கு கொலுசு விநியோகம்? திமுக முற்றுகை! – தருமபுரியில் பரபரப்பு!
தருமபுரியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் கொலுசுகள் வழங்குவதாக கூறி திமுகவினர் அதிமுக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்தது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 10வது வார்டில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு விநியோகித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அங்கு வந்த திமுக வேட்பாளர் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக நகர ஜெ.பேரவை செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் வைத்து பணம், கொலுசு விநியோகிக்கப்படுவதாக கூறி அவரது வீட்டை திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு வந்த போலீஸார் செந்தில் வீட்டை சோதனையிட்டு அங்கு கொலுசு, பணம் எதுவும் இல்லை என்று கூறியபின் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
