திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (07:50 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்
 
இந்த தேர்தலில் 12 ஆயிரத்து 384 பதவிகளுக்கு 57,200 பேர் போட்டியிடுகின்றனர் என்பதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் 31,029 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது