இனிமே அப்படி பேசமாட்டேன்!.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்!...
சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தமிழக முதல்வர் விஜய்க்கு கொலை மீரட்டல்விடும்படி பேசினார். சட்டமன்றத்தை பூட்டினால் உன்னுடைய எலும்பை உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்புவோம்.. இவ்வளவு ஒரு கேவலமான முதல்வரை தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய வரலாறு பார்த்ததே இல்லை என அவர் பேசியிருந்தார்.
இதையடுத்து, தவெக சார்பில் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் கிடைக்காத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பல நாட்களாகவே அவர் சிறையில் இருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியிருக்கிறது..
எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் அவர் ஆஜராக வேண்டும், அதே நேரம் சட்டப்பேரவை நடக்கும் நாட்களில் ஆஜராவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது..