1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. eighteen thousand police in security

விநாயகர் சதுர்த்தி விழா!. சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு!...

vinayagar
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இந்தியா முழுவதும் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

அதேபோல், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
வினாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை காரணமாக சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

பிள்ளையார் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இதிலாவது வெற்றி கிடைக்குமா?!.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த சீமான்!..