அதிமுக சிக்கலை என்னால் சரி செய்ய முடியும்: சசிகலா
அதிமுகவில் ஏற்பட்டுள்ள சிக்கலை என்னால் சரி செய்ய முடியும் என்றும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை நிச்சயம் சரி செய்வேன் என்றும் சசிகலா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஒற்றை தலைமை என்ற பொதுச் செயலாளர் பதவியை பிடித்து விடுவார் என்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள் என்றும் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோருக்கு கட்சி என்றும் சசிகலா பேட்டி அளித்துள்ளார்
மேலும் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவேன் என்றும் அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை என்னால் சரி செய்ய முடியும் என்றும் சசிகலா பேட்டி அளித்துள்ளார்
இதனை அடுத்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதில் சசிகலாவின் பங்கு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்