வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (08:29 IST)

பொதுமக்களே உஷார்! இனி மாஸ்க் கட்டாயம்! – மீறினால் அபராதம்!

Police
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

தற்போது 8 வகையான கொரோனா வைரஸ்கள் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் பிஏ5 வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.