1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:34 IST)

பாஜக முருகனை சந்தித்த சுந்தர்.சி? கடுப்பான குஷ்பு!!

குஷ்புவின் கணவர் சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததாகவும் குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்தி. 
 
நடிகை குஷ்பு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவர் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தபோது திடீரென முக ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திமுகவிலிருந்து வெளியேறினார்.  
 
அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ராகுல் காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறிய குஷ்பு, சமூக வலைதளங்களிலும் பாஜகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் பாஜக அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து சர்ச்சையில் சிக்கினார். 
 
இதனைத்தொடர்ந்து அவர் பாஜவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்போதே அதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது குஷ்புவின் கணவர் சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததாகவும் குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவின. 
 
இது குறித்து குஷ்பு தற்போது காட்டமான பதிலை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இணையப்போகிறேன் என்ற வதந்திக்கு விளக்கம் கொடுத்து என் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.