1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanidhi speech with egg in hand

அன்று செங்கல்.. இன்று முட்டை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

உதயநிதி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் போதும் என்று முட்டையை காண்பித்து அவர் விமர்சனம் செய்தார். நீட் விலக்கு நம் இலக்கு என்றும் கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் முட்டையை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி உரிமையை காத்திடுவோம் -அமைச்சர் உதயநிதி