வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (16:13 IST)

நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி உரிமையை காத்திடுவோம் -அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
தமிழக இளைஞர்  நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீட் விலக்கு நம் இலக்கு என்றும் கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.       , ‘’நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் போதும் என்று முட்டையை காண்பித்து அவர் விமர்சனம் செய்தார்

இதையடுத்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் ‘’ ஒட்டுமொத்த தமிழ்நாடே நிராகரிக்கும் நீட் என்னும் அநீதியை ஒழிக்க,  திமுக இளைஞரணி, திமுக மாணவரணி, திமுக மருத்துவ அணி முன்னெடுக்கும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்தினை இட்டு நமக்கு ஊக்கம் தந்துள்ளார்கள்.

இந்த கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வில்,  ‘தகுதி - தரம்’ என்று கூறி நீட்டை திணித்தவர்கள், இன்றைக்கு NEET PG தேர்வில் ‘0’ பெர்சன்டைல் எடுத்தால் போதும் என்று சொல்லும் கொடுமைகளை விளக்கி உரையாற்றினோம்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் கல்லூரிகள், பள்ளிகள், ஊர்கள், வீதிகள் என மூலைமுடுக்கெல்லாம் சுற்றி சுழன்று தமிழ்நாட்டு மக்களின் கையெழுத்தை பெற்றிடுவோம்.

அனைத்துக் கட்சி நண்பர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றிட வேண்டுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  ஏழை - எளிய - கிராமப்புற மாணவர்களின் மருத்துவம் படிக்க  வேண்டும் எனும் கனவை, நீட் தேர்வு சூறையாடி வருகிறது. மாணவர்களை மட்டுமன்றி பெற்றோர்களின் உயிரையும் பறிக்கின்ற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட, முக இளைஞரணி, திமுக மாணவரணி, திமுக மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளோம். 
 
அஞ்சல் அட்டை மூலமாக மட்டுமன்றி, https://banneet.in/#sign எனும் இணையதளத்தின் வாயிலாகவும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கலாம். நீட் தேர்வுக்கு எதிரான இந்த மாபெரும் ஜனநாயகப் போரின் மூலம் நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வி உரிமையை காத்திடுவோம் என்று தெரிவித்துள்ளார்.