செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (21:11 IST)

கலைஞர் மீது அன்பு கொண்டவர் பங்காரு அடிகளார்- உதயநிதி

pangaru adikalar
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் இன்று  காலமானார் . அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் இரங்கல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.

மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.