1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. Udhayanidhi wishes to leo team

’லியோ’ படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி
தளபதி விஜய் நடித்த லயோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அண்ணா, லியோ படத்தின் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ்  மற்றும் அனிருத், அன்பறிவ் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் வெற்றியை அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஒரு பக்கம் லியோ திரைப்படத்திற்கு ஏழு மணி காட்சி தமிழக அரசால் அனுமதிக்கப்படுமா என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் லியோ படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்த இந்த ட்வீட் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
லியோ படத்துக்கு ஏஜிஎஸ் திரையரங்கில் முன்பதிவு எப்போது? அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி!