திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:47 IST)

பாளையங்கோட்டையில் இரண்டு திருநங்கைகள் கொலை – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

பாளையங்கோட்டையில் உள்ள திருநஙகை குடியிருப்பில் வசித்து வந்த இரண்டு திருநங்கைகள் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே திருநங்கைகள் குடியிருப்பில் வசித்து வந்த பவானி என்ற திருநங்கையை மூன்று நாட்களாக காணாததால் அவரைக் கண்டுபிடிக்க சொல்லி போலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பவானி, மகாராஜா நகர் பகுதியில் உல்ள முருகன், அனுஷ்கா ஆகியோரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார் என்று அறிந்த போலிஸார், அங்கு சென்ற போது அவர்களும் வீட்டில் இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறை இருந்ததால் போலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது சம்மந்தமாக நடத்திய விசாரணையில் போலீஸார் ரிஷிகேஷ் உள்பட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். மேலும் 3 பேரின் சடலங்களையும் சாக்குமூட்டையில் கட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கிணற்றில் போட்டதாகக் கூறியுள்ளனர். அந்த இடங்களுக்கு சென்ற போலிஸார் உடல்களை மீட்டுள்ளனர்.