திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:54 IST)

விஜய் ரசிகரின் தற்கொலைக்கு இதுதான் காரணம் – மீரா மிதுன் சர்ச்சை பேச்சு!

சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர் பாலா என்பவர் பற்றி சர்ச்சையான வகையில் பேசியுள்ளார் மீரா மிதுன்.

சில நாட்களுக்கு முன்னர் பாலா(21) என்ற விஜய்யின் ரசிகர் ஒருவர் விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு மன அழுத்தத்தால் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த பதிவில், “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டு விஜய்க்கு டேக் செய்துள்ளார். இந்த விஷத்தை அறிந்த மற்ற விஜய் ரசிகர்கள் பெருந்துயரத்தில் அவருக்கு அஞ்சலி கூறி வருகின்றனர். அத்துடன் திரைப்பிரபலங்களான நடிகர் சஞ்சீவ்,  ஷாந்தனு, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் #RIPBala என்ற ஹேஷ் டேக்கில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தனது கல்வி சான்றிதழ்கள் எரிந்து போனதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விஷயம் சம்மந்தமாக பாலாவின் அக்காவுக்கு தொலைபேசி மூலமாக ஆறுதல் சொல்லியுள்ளாராம் விஜய். அப்போது ‘இப்படி செய்யலாமா? எந்தவொரு விஷயத்துக்கும் தற்கொலை தீர்வாகுமா? எனக் கேட்டுள்ளார். மேலும் அவர் அக்கா கணவரிடம் ‘நீங்கள் அவனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை’ என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி தன்னுடைய வீடியோ ஒன்றில் பேசியுள்ள மீரா மிதுன் ‘தமிழக மீடியாக்கள் ஒரு தற்கொலையை கூட நியாயப்படுத்தி அதை ஒரு நாள் முழுக்க பேசுபொருளாக மாற்றுகின்றன. சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்குக் காரணம் எப்போதும் அவர் விஜய் பற்றியே போஸ்ட் கொண்டு இருந்ததால் அவரது குடும்பத்தினர் கோபமாகி திட்டி வேலைக்கு போக சொல்லி இருப்பார்கள். அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார். ஆனால் அதை இவர்கள் செய்தியாக மாற்றி காசு பார்க்க ஆசைப்படுகின்றனர். தமிழ் நாடு மீடியாக்கள் அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களை பார்த்து ஜர்னலிசத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.