1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Two more metro train scheme says minister ptr palanivel

பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில்: அமைச்சர் தகவல்

metro
சென்னையில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பதும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார் 
 
முதல்கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நீடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதேபோல் கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் இயக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
 
இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி மக்களுக்கு மிகப் பெரிய பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவரை கொலை செய்த பெண்!