1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (16:53 IST)

பொறியியல் பாடத்திட்டத்தில் மாற்றம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Ponmudi
இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சட்டப்பேரவையில் கூறியதாவது:

தமிழக சட்டபேரவையில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். பொறியயல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்