செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (12:54 IST)

பொதுக் கூட்டத்துக்கு வராத 2 அமைச்சர்கள் – அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு !

அதிமுக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு முக்கியமான அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா பற்ற வைத்த தீ அதிமுகவில் தற்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் சற்று முன்னர் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகிய இரண்டுபேரும் பங்கேற்காததால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.