புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (10:58 IST)

பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே!! தலைமையகத்தில் களைக்கட்டும் போஸ்டர்

அதிமுக அலுவலகம் வெளியே முதல்வரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற விவகாரம் அதிமுகவில் வெளிவந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.
 
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் அதிமுக அலுவலகம் வெளியே முதலமைச்சரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே! இதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பு என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியான நிலையில் இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.