புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (08:43 IST)

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது உண்மைதான் – பாக்யராஜ் பேச்சால் சர்ச்சை !

நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுக்குக் காசு கொடுப்பது ஏன் என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் ஜூன் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இதற்கிடையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.  இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் பாக்யராஜ் அணி சார்பாக நாடக நடிகர்களுக்கு ஒட்டுக்குக் காசு கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நேற்று வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ இது குறித்து சூசமாகப் பதில் அளித்துள்ளார். அதில் ‘எல்லாரும் சொல்வாங்க நாடக நடிகர்களுக்கு காசு கொடுத்து ஓட்டு கேக்குறாங்கன்னு… நாடகக் கலைஞர்களை பாக்க போனா காசு கேப்பாங்க… ஏன்னா அவங்க எப்பவுமே கஷ்டத்துலதான் இருக்காங்க… நாங்க கஷ்டத்துல இருக்கோம் ஓட்டு கேக்க வந்துட்டான்னு சொல்வாங்க… அதனால இந்தா இப்போதைக்கு இத வைச்சிக்க ஆட்சிக்கு வந்ததும் மத்தத பாத்துக்கலாம்னு சொல்லுவோம்… அது நான் போனாலும் அதான்… வேற யார் போனாலும் அதான்.’ என ஓபனாக பேசியுள்ளார்.

பாக்யராஜே இப்படி நாடக நடிகர்களுக்கு காசு கொடுப்பதை ஒத்துக்கொண்டுள்ளதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.