புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (08:01 IST)

தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள்! ஓபிஎஸ்-ஐ டம்மியாக்க ஈபிஎஸ் முடிவா?

இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளரான தனது மகன் ரவீந்திரநாத் குமாரை அமைச்சராக்கி அழகு பார்க்க துணை முதல்வர் ஓபிஎஸ் பெரும் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சி ஈபிஎஸ் ஆதரவாளர்களால் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் பனிப்போர் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை டம்மியாக்க ஈபிஎஸ் முடிவு செய்திருப்பதாகவும், ஆந்திராவை போலவே தமிழகத்திலும் ஐந்து துணை முதல்வர்கள் நியமனம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஒற்றைத்தலைமை கேட்டு குரல் கொடுப்பவர்களுக்கு துணை முதல்வர்கள் பதவி கொடுத்து அதிருப்தியாளர்களை திருப்தி செய்வதுடன்  ஓபிஎஸ் பதவியையும் டம்மியாக்குவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஒருபுறம் பாஜகவும், இன்னொரு புறம் திமுகவும் திட்டமிட்டு வரும் நிலையில் உள்கட்சியிலேயே ஒற்றுமை இல்லாததால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என அக்கட்சியின் உண்மையான தொண்டர்கள் பெரும் கவலையில் உள்ளனர்