1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (08:43 IST)

ஆட்சியையும், கட்சியையும் கைக்குள் வைக்க ஈபிஎஸ் ப்ளான்: ஏமாறாப்போகும் ஓபிஎஸ்?

அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன்பொறுப்பிலெயே வைத்துக்கொள்ள உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. 
 
அதிமுகவின் முக்கிய தலைவரான ராஜன் செல்லப்பா, கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் அதேபோல் ஒற்றை தலைமை தேவை என கூறியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது குறித்து முடிவெடுக்க அதிமுகவின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த கூட்டத்தில் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி பக்கா ப்ளானை வைத்துள்ளாராம். அதாவது, ஜெயலலிதா முதல்வர், பொதுச்செயலாளர் என இரண்டையுமே அதாவது கட்சியையும் ஆட்சியையும் தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன் கைக்குள் வைக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். 
 
தனக்கு ஆதரவளிக்க அதிமுகவில் இருக்கும் பலரை தனியே சந்தித்து பேசியும்விட்டாராம். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு பிறகு யாருக்குமே செல்லவில்லை. அதை இப்போது தனதாக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.