தொடர்புடைய செய்திகள்
- 41 பேர் இறந்தபோது நேரில் போகாதவர் ஒரு தலைவரா?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி!...
- நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்? அவரே அளித்த பதில்..!
- விஜய் அப்பா அட்வைஸ் எங்களுக்கு வேண்டாம்!. செல்வ பெருந்தகை பேட்டி...
- அதிமுகவை அடிக்க வேண்டாம்.. திமுக மட்டுமே நமது டார்கெட்.. விஜய்யின் திடீர் மனமாற்றம்..!
- நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...
தேர்தல் பணியில் வேகம் காட்டும் தவெக!. விரைவில் வேட்பாளர் பட்டியல்!...
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பற்றி பேசுவது, சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது என்ன அனைத்து கட்சிகளும் களமிறங்கிவிட்டது.
2026 தேர்தலை பொருத்தவரை நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என சிலர் நம்புகிறார்கள். குறிப்பாக திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை விஜய் பெறுவார் என பலரும் நம்புகிறார்கள். விஜயுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை என்பதால் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனத்தெரிகிறது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தவெக துவங்கிவிட்டது. குறிப்பாக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் துவங்கி 3 வருடங்கள் ஆகும் நிலையில் அன்று தவெகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள்.
வேட்பாளர்களிடம் தவெக தலைவரான விஜய் நேர்காணல் நடத்தி அவர்களின் பின்புலம், அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, அரசியலில் அனுபவம், உள்ளூர் செல்வாக்கு என எல்லாவற்றையும் மதிப்பிட்டு வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறார் என சொல்லப்படுகிறது
வருகிற பிப்ரவரி 2ம் தேதி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது அது விவாதத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், தேர்தல் பிரச்சாரத்தை எங்கிருந்து துவங்கலாம் என்பது பற்றியும் விஜய் முக்கிய நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
2026 தேர்தலை பொருத்தவரை நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என சிலர் நம்புகிறார்கள். குறிப்பாக திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை விஜய் பெறுவார் என பலரும் நம்புகிறார்கள். விஜயுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை என்பதால் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனத்தெரிகிறது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தவெக துவங்கிவிட்டது. குறிப்பாக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் துவங்கி 3 வருடங்கள் ஆகும் நிலையில் அன்று தவெகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள்.
வருகிற பிப்ரவரி 2ம் தேதி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது அது விவாதத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், தேர்தல் பிரச்சாரத்தை எங்கிருந்து துவங்கலாம் என்பது பற்றியும் விஜய் முக்கிய நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்