1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanismy direct attack tvk vijay

41 பேர் இறந்தபோது நேரில் போகாதவர் ஒரு தலைவரா?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி!...

eps vijay
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்தே திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்  எதிர்பார்த்தார்கள்
. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது கூட அதிமுகவும், பாஜகவும் விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தன.

ஒருபக்கம் விஜயை அதிமுக கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் விஜய் பிடி கொடுக்கவில்லை.. அதோடு சமீபத்தில் நடந்த தவெக நிர்வகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் அதிமுக ஒரு ஊழல் அடிமை கட்சி என்று விமர்சித்தார்.. இதையடுத்து அதிமுகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘விஜய் ஒரு நடிகர் அவ்வளவுதான்.. ஆனால் நாங்கள்தான் அரசியல்வாதி.. எங்களுக்குதான் அரசியல் தெரியும்.. அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை.. கொரோனா காலத்தில் கூட எல்லா தொகுதிகளுக்கும் நான் சென்றேன்.. ஆனால் விஜய் அவரைப் பார்க்க வந்து இறந்துபோன 41 பேர் குடும்பத்தைக் கூட சந்திக்கவில்லை.. இது ஒரு அரசியலா?.. அவர் ஒரு அரசியல் தலைவரா?? என்று கேள்வி எழுப்பினார்.

அரசியல் என்றால் மக்களை சந்திக்கவேண்டும்.. புதிதாக கட்சி தொடங்கும் போது யார் வேண்டுமானாலும் என்ன வேணாலும் பேசலாம் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி அவனை சொல்லி வருகிறார்.. ஆனால் உண்மையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான் இங்கே போட்டி.. இது மக்கள் எல்லோருக்கும் தெரியும்’ என்று அவர் பேசினார்.


About Writer
Mahendran