1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk vijay announce ai university

AI யூனிவர்சிட்டி.. AI-க்கு தனி அமைச்சர்!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய்!...

vijay
தவெக தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்.. கன்னியாகுமரியின் பல பகுதிகளிலும் அவர் ரோட் ஷோ செய்தார். மேலும் பல பகுதிகளிலும் சாலைகளில் அவர் சைக்கிள் ஓட்டியும் வாக்குகளை சேகரித்தார். அப்போது விஜய் ரசிகர்களும்,தவெக தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் அவரை பார்ப்பதற்காக வந்தனர்.

கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்த விஜய் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.. தமிழ்நாட்டில் AI பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.. செயற்கை நுண்ணறிவுக்கு(AI) தனி அமைச்சகம் உருவாக்கப்படும்..

செயற்கை நுண்ணறிவு தலைநகராக தமிழ்நாடு மாற்றப்படும்.. பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசு நலத்திட்டம் வழங்கப்படும்..

வெற்றி தமிழ்நாடு சூப்பர் மொபைல் ஆப் உருவாக்கப்படும்.. அதில் அரசுக்கு பொதுமக்களும் தங்களின்  ஆலோசனைகளை முன் வைக்கலாம்.. 5 லட்சம் கையொப்பம் கொண்ட மனுக்கள் மீது சட்டமன்றத்தில் தனி விவாதம் நடத்தப்படும்.

மீனவர் பாதுகாப்பு உரிமை தொகையை 8 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.. சிறைபிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கப்படும்..,கடல் தாய் வீட்டு வசதி திட்டத்தில் சிதலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித் தரப்படும்’ என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
பாஜகவை எதிர்த்தா இப்டிதான்!.. ஜனநாயகன் லீக் பண்ணதே அவங்கதான்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி..