1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2026 (11:45 IST)

வீட்டுக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. வைரல் வீடியோ!..

vijay
நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களை நம்பித்தான் விஜய் அரசியல் கட்சியையே துவங்கியிருக்கிறார்.. இளைஞர்களின் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் விஜய் இருக்கிறார். அந்த நம்பிக்கையில்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அவரின் தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

கடந்த சில நாட்களாகவே விஜய் பழைய தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் இன்று அவர் காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.. அங்கு ரோட் ஷோ நடத்துகிறார்.

பொதுவாக விஜயை பார்ப்பதற்கு நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு முன்பு எப்போதும் ஏராளமான ரசிகர்கள் நிற்பார்கள்.. ஆனால் விஜய் வெளியே வந்தாலும் சரி இல்லை.. வெளியே இருந்து உள்ளே காரில் வந்தாலும் சரி அவர்களுக்கு ஒரு கை கூட காட்டாமல் சென்று விடுவார்..

இந்நிலையில் இன்று காலை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களிடம் கைகாட்டி விட்டு உடனே உள்ளே சென்று விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.