1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2026 (16:39 IST)

பாஜகவை எதிர்த்தா இப்டிதான்!.. ஜனநாயகன் லீக் பண்ணதே அவங்கதான்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி..

jananayagan
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன் கடத்த ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. எனவே, தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஒரு மாத காலமாகியும் முன்னேற்றம் ஏற்படவில்லை.. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுதணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார்..

ஆனால் தற்போது வரை ஜனநாயகன் படத்திற்கு சென்சார்ச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என சொல்வதால் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை குழு படத்திற்கு பிரச்சனை கொடுக்கிறது என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக் ஆனது. இது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் படம் எடிட்டிங்கில் இருந்தபோது படம் வெளியே கசிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது எப்படி கசிந்தது என தயாரிப்பாளர் தரப்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருபக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது..

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ‘தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. மத்திய அரசு அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. எனவே அமித்ஷா திட்டம் போட்டு செய்த வேலைதான் இது.. அமித்ஷாவே இதை நேரடியாக செய்திருக்கிறார்.. திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் அவர்களுக்கு எதிரான சித்தாந்த நிலைப்பாட்டை எடுத்தால் இப்படித்தான் செய்வார்கள்.. இதுதான் அவர்களின் குணம்’ என்று பேசியிருக்கிறார்..