கருத்துக்கணிப்பில் ஷாக்கான திமுக!. தொகுதியை மாற்றும் உதயநிதி ஸ்டாலின்?...
திமுகவுக்கு இதற்கு முன்பு இருந்தது போல தற்போது தமிழக அரசியல் சூழல் இல்லை. ஏனெனில் விஜயின் அரசியல் வரவு அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. அதனால்தான் தேமுதிகவை திமுக தலைமை தங்களின் கூட்டணியில் இணைத்துக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..
ஏனெனில் விஜய் 10 சதவீதத்துக்கு மேல் ஓட்டுக்களை வாங்கினாலே அது கண்டிப்பாக தங்கள் வெற்றியை பாதிக்கும் என அதிமுக, திமுக இரண்டுமே கருதுகிறது. பல கருத்துக்கணிப்புகள் விஜய் 18 சதவீத வாக்குகளை பெறுவார் என சொல்கிறது. ஆனாலும் விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை வாங்குவதால் யாருக்கும் எந்த பணமும் இல்லை.. அது திமுகவிற்கே சாதகமாக முடியும் என்கிற கருத்தும் நிலவுகிறது.
ஆனாலும், தவெகவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காய்களை நகர்த்தி வருகிறது திமுக. காங்கிரஸ் கட்சி எக்காரணத்தை கொண்டும் தவெக பக்கம் போய்விடக்கூடாது எனவும் திமுக கருதுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒருபக்கம் சென்னையில் உள்ள பல தொகுதிகளிலும் திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பது கருத்துக்கணிப்பில் தெரியவர திமுக தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறதாம். எனவே, கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் முக ஸ்டாலின் அல்லது அவரின் மகன் உதயநிதி இருவரில் யாரேனும் ஒருவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..